மாணவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் இ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்….

152
Advertisement

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆண்டு தேசிய விளையாட்டுப்போட்டியில் வீரர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு நிர்வாகத்திறமை இல்லாததால், தமிழக மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மாணவர்களுக்கு விளையாட்டுத்துறையில் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களில் தங்களது துறைசார்ந்த பணிகளில் உரிய கவன செலுத்தவேண்டும் என்றும் இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார். கடுமையாக பயிற்சி செய்து விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைக்க தயாராக இருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.