கட்சி கையில் கிடைத்தவுடன் காத்திருக்கும் ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS

182
Advertisement

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து, தன்னை அசைக்க முடியாத ஒற்றைத் தலைமையாக நிறுவிக் கொள்ளும் முயற்சியில் EPS ஈடுபட்டுள்ளார்.

ஆனால், அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தி வருகின்றன.

ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில், பிற அமைச்சர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு இருந்தாலும் எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை லாக் செய்யும் வகையில் ரெய்டோ விசாரணையோ நடைபெறவில்லை.

எடப்பாடியை நோக்கி பாய்ந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கையும் அவர் நாசூக்காக திமுக பக்கமே திருப்பி விட்டார்.

பட்டுவாடா செய்பவர்களாக பிரபலமாக கூறப்படும் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி லஞ்ச ஒழிப்புத்துறையின் கண்காணிப்பில் இருந்ததால், இடைத் தேர்தலில் பணம் செலவு செய்ய தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் தனது அரசியலை வலுப்படுத்தத் துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் மேலிடத்தின் கண்ணை உறுத்தவே, லஞ்ச ஒழிப்பு துறையின் சொத்துகுவிப்பு வழக்கு விரைவில் பழனிச்சாமியின் மீது பாயும் என எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும், கொடநாடு வழக்கு விசாரணையும் சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கும் போன்ற அனுமானங்கள் அடிபடுவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.