மாம்பழம் சாப்பிடனும்..ஆனா Sugar ஏறக்கூடாதா? இதை மட்டும் கரெக்டா செஞ்சா போதும்…

156
Advertisement

வெயில் காலம் வந்து விட்டாலே மாம்பழ சீசனும் களை கட்ட தொடங்கி விடும்.

அல்போன்சா, பங்கனப்பள்ளி என ஒவ்வொரு மாம்பழத்திற்கும் இருக்கும் தனித்துவமான சுவைக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. ஆனால், பொதுவாகவே சக்கரை நோயாளிகளுக்கு மாம்பழம் சாப்பிட்டவுடன் இரத்த சக்கரை அளவுகள் உயரும் பயம் உள்ளதால், அவர்களை மாம்பழம் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்துவார்கள்.

மாம்பழத்தில் 55 என்ற மிதமான கிளைசெமிக் குறியீடு இருந்தாலும், 15 கிராம் அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. மாம்பழங்களை 15 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள கார்போஹைட்ரேட் எளிதில் ஜீரணம் ஆக உதவுகிறது. சக்கரை அளவுகளை பரிசோதித்து விட்டு மாம்பழங்களை சாப்பிடுவது சிறந்தது.

மாம்பழம் சாப்பிடும் போது பிற கார்போஹைட்ரேட் உணவுகளின் அளவை குறைப்பதன் மூலம் சக்கரை அளவுகளை சமாளிக்க முடியும். அப்படியே சாப்பிட்டாலும் ஒரு நேரத்தில் அரை மாம்பழத்திற்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலையில் உடற்பயிற்சி செய்த பிறகு  சக்கரை நோயாளிகள் பழம் சாப்பிட ஏற்ற நேரமாக அமையும்.

மாம்பழங்களை வெட்டி துண்டுகளாக சாப்பிடுவதன் மூலம் அளவாக சாப்பிடுவதை உறுதி செய்ய முடியும். மாம்பழ ஜூஸ் குடித்தால் அதிக சக்கரை அளவு உடலில் சேரும் ஆபத்து இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சக்கரை அளவுகள் உயரும் என்பதால் அந்த நேரத்தில் மாம்பழங்களை சாப்பிடக் கூடாது.

உணவுடன் சேர்த்து சாப்பிடுவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கூறும் உணவியல் நிபுணர்கள், அதே நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு இனிப்பு போல மாம்பழத்தை இறுதியில் சாப்பிடுவது சரியான முறையல்ல என எச்சரிக்கின்றனர்.