மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

85
Advertisement

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதை TANGEDCO கட்டாயமாக்கி உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் அட்டையை  இணைப்பதால் எந்த சிக்கலும் இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

பயனர்கள் சுலபமாக மின் இணைப்புடன் ஆதாரை, அரசு அறிவித்துள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் இணைத்து கொள்ளலாம். 

https://adhar.tnebltd.org/adharupload என்ற இணையப்பக்கத்திற்கு செல்லவும். அதில், Link your service connection with aadhar என்ற பகுதியை கிளிக் செய்தால்  service connection number கேட்கப்படும்.

Advertisement

அந்த இடத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவிட்டு என்டர் கொடுத்த உடன், முன்னதாக நீங்கள் அளித்த செல்போன் எண்ணின் கடைசி எண் தெரியும். அது சரியாக உள்ளதா என பார்த்து சமர்ப்பித்த உடன், அந்த எண்ணிற்கு OTP எண் வரும். அந்த OTP எண்ணை enter செய்த உடன் Owner அல்லது tenant என்ற option வரும்.

அதையும் fill செய்தவுடன் ஆதார் எண் தகவல்களை சரிபார்க்க கேட்கும். பின்னர் வரும் declaration கேட்கப்படும். அதை submit செய்தவுடன் வெற்றிகரமாக பதிவு செய்துவிட்டதாக வரும் செய்தியுடன் மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைப்பு process முடிவடைந்து விடும்.