கிழக்கு உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக, ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களுக்கு மேல் போர் நடத்தி வருகிறது.
கிழக்கு உக்ரைனில் ரஷிய படையினரின் தாக்குதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறி உள்ளது.
அவர்களில் 2,004 பேர் குழந்தைகள் என ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் தெரிவித்துள்ளார்.