“என்னை ஓட வைக்காதீர்கள்..” தல தோனி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ரசிகர்கள் ஷாக்! என்ன மேட்டர் தெரியுமா…..

137
Advertisement

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று போட்டி முடிந்த பிறகு தல தோனி சொன்ன சில கருத்துகள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கடந்தாண்டு சென்னைக்கு மிக மோசமாக அமைந்த நிலையில், இந்தாண்டு அவர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகின்றனர். நேற்றைய தினம் கூட டெல்லிக்கு எதிரான போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தைச் சென்னை வெளிப்படுத்தியது. முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 167 ரன்களை எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெறும் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 7இல் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.