சமையலறையில் நாய் செய்த செயல்

166
dog
Advertisement

சமையலறைக்குள் புகுந்து உணவைத் திருடி மாட்டிக்கொண்ட நாயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடுமையான பசியில் இருக்கும் வளர்ப்பு நாய் ஒன்று உணவைத் தேடி சமையலறைக்குள் செல்கிறது. உயரத்தில் வைக்கப்பட்டிருந்த உணவை தன்னுடைய கால்களால் தள்ளி எடுத்து அதனை வாயால் கவ்வ முயன்றபோது நாயின் உரிமையாளர் வீடியோ எடுப்பதை நாய் பார்க்கிறது.

உணவு திருடியதை உரிமையாளர் பார்த்து விட்டதால் நாய்க்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது பசியில் இருந்தாலும் உணவை எடுத்துச் செல்லாமல் அங்கேயே போட்டு விடுகிறது.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். ஆனால் பசியை பொருட்படுத்தாமல் விசுவாசத்தை காண்பிக்கும் வகையில் நாய் உணவை எடுத்துச் செல்லவில்லை. நாயின் இந்த செயல் இணையவாசிகளை மிகவும் கவர்ந்துள்ளதால் வைரலாகி வருகிறது.