நாய் சங்கலியை விழுங்கிய பாம்பு

268
Advertisement

சில சமயங்களில் பாம்புகள் அளவிற்கு அதிகமாக உள்ள உணவை விழுங்கிவிட்டு ஊர்ந்து செல்லமுடியாமல் ஒரே இடத்தில் இருக்கும்.அதுவே சில சமயங்களில் பாம்புக்கு ஆபத்தாகி விடுகிறது.  

இந்நிலையில் , ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்கா மருத்துவர்கள் பாப்லோ என பெயரிடப்பட்ட மலை பாம்பு, அடையாளம் தெரியாத பொருள் ஒன்றை விழுங்கிவிட்டு அவதிப்பட்டு வந்ததை கவனதித்தனர்.

பாம்பு விழுங்கியது என்னவென்று தெரிந்து கொள்ள  எண்டோஸ்கோப்பை பயன்படுத்தியபோது அதிர்ச்சி காத்திருந்தது. பாம்பு விழுங்கியது மற்ற ஒரு பாம்பையோ உள்ளது வேறு விலங்கையோ அல்ல எனபதை மட்டும் தெரியவந்தது.

பின்பு , பாம்பின் வாயின் வழியாக கேமராவில் தென்பட்ட பொருளை வெளியே இழுத்தனர்.இதனால் பாம்பு சில மணி நேரம் அவதிப்பட்டுருந்தாலும்,மருத்துவர்கள் விடாமல் அந்த பொருளை வெளியில் இழுத்தனர்.

இறுதியில் மருத்துவர்களின் முயற்சி பலனளித்தது,கூடவே அதிர்ச்சியும் அளித்தது.பாப்லோ விழுங்கியது ஒரு நாயின் கழுத்தில் கட்டப்படும் செயின்யை பாம்பின் வயிற்று பகுதியிலிருந்து வெளியே எடுத்தனர்.பின் சரியான சிகிச்சை அளித்து அந்த பாம்பை மீண்டும் அதன் வாழ்விடத்தில் விட்டனர்.

பாப்லோவின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு இணையவாசிகள் தங்கள் வாழ்த்துக்களையும் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துவருன்றனர்.