ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

372

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், 5ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பான இந்த போட்டியில், முதல் செட்டை நடால் கைப்பற்றி நிலையில், 2வது செட்டை ஜோகோவிச் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து 3வது செட்டை நாடல் கைப்பற்றிய நிலையில், 4வது செட்டை கைப்பற்றி கடும் போட்டி நிலவியது.

இறுதியில் 4வது செட்டையும் நடால் கைப்பற்றி, 6-2, 4-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.