அரசியல்வாதி மகனை கரம்பிடிக்கும் தனுஷ் நடிகை விரைவில் டும் டும் டும்..!

76
Advertisement

சினிமாவில் இளம் நாயகியாக இருப்பவர் மேகா ஆகாஷ். ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானார்.

ஆனால் அதற்கு முன்னரே கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.

அதன்பிறகு சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, அதர்வாவின் ‘பூமாராங்’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறிவிட்ட மேகா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரபல அரசியல்வாதி மகன் ஒருவரை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்யவுள்ளார் என்றும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.