திருமண மண்டபம் இடிந்ததில் கொத்தோடு கீழே  விழும் மக்கள்  

226
Advertisement

திருமண நாளில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று நடனமாடி மகிழ்வது.அன்றையதினம் வயது வித்தியாசமின்றி அனைவரும் நடனம் ஆடி மகிழ்வர்.

சமீபகாலங்களில்  மணமக்களும் சொந்தங்கள் , நண்பர்களுடன் இணைந்து மேடையில் நடனம் ஆடி அவர்களின் திருமணத்தை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றிவருகின்றனர்.

இதற்கிடையில், திருமணத்தில் கூட்டமாக நடனமாடிய போது  தரைத்தளம் உடைந்து அனைவரும் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெட்டிட் தளத்தில் பதிவேற்றம் செய்ல்பட்டுள்ள இந்த வீடியோவில்,திருமணம் விழா ஒன்று மாடி பகுதியில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.அப்போது பத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றாக அந்த அறையில் நடுவே நடனம் ஆடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், எதிர்பாராதவிதம் அந்த தளம் உடைந்து அனைவரும் கீழ் தளத்தில் விழுந்துவிடுகிறார்கள்.பார்க்கும்போது அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.