Youtube பயனர்களுக்கு எச்சரிக்கை!

219
Advertisement

டிஜிட்டல் தொழில்நுட்பம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே வரும் சூழலில், அதை தவறாக பயன்படுத்தி சைபர் மோசடியில் ஈடுபடும் hackerகளும் பல நுணுக்கங்களை கற்று தேர்ந்து வருகின்றனர்.

Bitcoin mining software பற்றி விளக்குவதாக வலம் வரும் போலி வீடியோக்கள், பின் வீடியோவை டவுன்லோட் செய்ய லிங்க் தருவதாக கூறுவது தான் அண்மையில் நடந்து வரும் மோசடி நாடகத்தின் முதல் படி.

அதற்காக ஒரு password அளித்து, பயனர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, வைரஸ் free லிங்க் போன்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றது.

அப்படி வீடியோவில் நுழையும் பயனர்களின் போனில் பென்னிவைஸ் (Pennywise) என்ற மால்வேரை (Malware) ஊடுருவ செய்து சமூகவலைத்தள பக்க விவரங்கள் துவங்கி bitcoin முதலீடு வரை போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுகிறது.

அனைத்து தகவல்களையும் சேகரித்து, மோசடி நபர்களின் சர்வர்களில் உடனடியாக மாற்றிவிடும் பென்னிவைஸ், அதன்பின் தானாகவே delete ஆகிவிடுவதால், இவ்வகை கிரிமினல்களை track செய்வது கடினமாகிறது.

அறிமுகமில்லாத நபர்கள் அனுப்பும்  அல்லது சந்தேகத்திற்குரிய தலைப்புகளுடன் இருக்கும் வீடியோக்களை கிளிக் செய்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.