உரிமையாளருடன் குட்டி டான்ஸ் போடும் “கன்றுகள்”

227
Advertisement

எந்த வளர்ப்பு விலங்குகள் ஆகட்டும் தன் உரிமையாளர்கள் என்ன செய்கிறாரோ,தானும் அதை செய்ய முயற்சிக்கும்.இது போன்று தன் செல்ல வளர்ப்பு பிராணிகளுடன் ஆட்டம் போடும் உரிமையாளர்கள் எந்த மகிழ்ச்சியான  தருணத்திலும் தன் செல்லப்பிராணிகளை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

இது போன்று ,இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில்,பண்ணை உரிமையாளர் ஒருவர் தன் பசுக்களுக்கு உணவு வழங்கிவருகிறார்.பின்பு கன்றுகள் உள்ள பகுதிக்கு வரும் அவர்,கன்றுகள் முன் உற்சாகமாக பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

தன் உரிமையாளர் இப்படி ஆடுவதை  காணும் அந்த கன்றுகள் அனைத்தும் துள்ளிக்குதித்து உரிமையாளர் ஆடுவது போலவே மகிழ்ச்சியாக ஆடுகிறது.மனதை கவரும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.