திருமணத்தில் போர் வாள்களுடன் குத்தாட்டம் போட்ட பெண்கள்

267
Advertisement

ஹைதராபாத்தில் திருமணம் ஒன்றில் கைகளில் போர் வாள்களுடன் பெண்கள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணத்தில் நடனம் ஆடுவது சகஜம் தான்.ஆனால் இங்கோ திருமண ஊர்வலத்தில் ஆண்கள் பெண்கள் என பலர் கைகளில் போர் வாள் உடன் நடனம் அடிக்கின்றனர் அத்துடன் வாளை சுற்றி சாகசம் செய்வது போல இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.

இந்த செயல் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளதாகவும் ,இது குறித்து காவல்துறை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்கப்பட்டதாகவும் , அவர்கள் கைகளில் வைத்திருந்த வாள்கள் போலியானது மேலும் வாளுடன் வித்தை காட்டியது ஏற்கனவே பயிற்சிபெற்ற நபர்கள் தான் எனவும், வழக்கு எதுவம் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.