“மாநிலக்கல்லூரி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும்”

231

சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார்.

இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இங்கு முதல்வராக வருகை புரி்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

சமூகநீதி கல்லூரியாக திகழும் மாநிலக்கல்லூரியில் மிசா காலத்தில், போலீஸ் காவலுடன் தேர்வு எழுதிய நாட்களை நெகிழ்ச்சியோடு முதல்வர் நினைவுகூர்ந்தார்.

நூற்றாண்டு காலம், பழமைவாய்ந்த கல்லூரியில், உ.வே.சாமிநாதய்யர், மூதறிஞர் ராஜாஜி, நோபல்பரிசுபெற்ற சர்.சி.வி.ராமன் உள்ளிட்ட பலர் பெருமை சேர்த்துள்ளனர் என்பதை நினைவுகூர்ந்தார்.

மாநிலக்கல்லூரியில் 300 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கும் வகையில், சிறப்பு தங்கும் விடுதி அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இரண்டாயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.