பூமியை தவிர்த்து மற்ற கோள்களில் வேற்றுகிரக வாசிகள் வசிக்கின்றனரா இல்லையா அல்லது வேறு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா போன்றவை காலங்காலமாக, மனிதனுக்கு விடை கிடைக்காத கேள்விகளாகவே உள்ளது.
எனினும், தீராத ஆர்வத்தில் நடத்தப்படும் ஆராய்ச்சியில் அவ்வப்போது சில புதிய குறியீடுகள் கிடைக்கவே செய்கிறது.
அண்மையில், அது போல் ஒரு நிகழ்வு சீனாவில் நடந்துள்ளது.
சீனாவில் உள்ள Sky Eye என அழைக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய ரேடியோ டெலெஸ்கோப் வானியல் தொடர்பான மிக நுணுக்கமான மற்றும் துல்லியமான அலைவரிசை மாற்றங்களை கணிக்க கூடியது.
2020க்கு பின்னர், இந்த டெலெஸ்கோப் உதவியுடன் வேற்று கிரக உயிரினங்களை தேடும் பணி அதிகாரபூர்வமாக துவங்கப்பட்டது.
அதன் பிறகு, 2019இல் ஒரு முறையும் 2022இல் ஒரு முறையும் புதிய வகை narrow band மின்காந்த அலைகள் பதிவாகி உள்ளது.
இதற்கு காரணம் சாதாரண அலைவரிசை குறுக்கீடாக இருக்க வாய்ப்பு உள்ள நிலையில், அப்படி இல்லாத பட்சத்தில் வேற்று கிரக வாசிகளை பற்றிய ஆராய்ச்சியில் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு சார்ந்த ஊடகங்களில் இந்த தகவலை வெளியிட்டு பின் சீன அரசு நீக்கிவிட்டாலும், செய்தி அதற்குள்ளாக வெளியாகி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.