கோவையில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

38
Advertisement

கோவை அரசூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 24 ஆம் தேதி  ஒண்டிப்புதூர் அரசுப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஜெராக்ஸ் எடுப்பதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்தபோது, இருசக்கர வாகனத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.