மனிதர்களைப்போல பூனை ஒன்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
சீனாவில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீடியோ ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பூனை உடற்பயிற்சி செய்யும் காட்சி தத்ரூபமாக உள்ளது.
உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் தொப்பையைக் குறைத்து வயிற்றுப் பகுதியைத் தட்டையாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதற்காகத் தரையில் படுத்துக்கொண்டு முன்னோக்கி உடம்பை வளைத்து வளைத்து பயிற்சிசெய்வார்கள். இப்படித் தினமும் செய்வதன்மூலம் அடிவயிற்றைக் குறைக்க முடியும்.
இதுபோன்ற பயிற்சியைத் தன் எஜமானர் மேற்கொள்வதை இந்தப் பூனை பார்த்திருக்கும்போலும். எஜமானர்போலவே இந்தப் பூனையும் செய்யும் தொப்பையைக் குறைப்பதற்கான இந்த வீடியோ காட்சிகள்தான் சமூக ஊடகவாசிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
பூனையின் இந்த உடற்பயிற்சி பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது.