“எனக்கு பிடித்த கார்ட்டூனை போட்டு விடு”- பூனையின் குழந்தைத்தனம்

323
Advertisement

பணிசுமைக்கு மத்தியில் நாம்  தேடுவது சற்று ஓய்வு.அது போன்ற நேரங்களில் மனதிற்கு பிடித்ததை செய்வோம்.அதில் மறுக்கமுடியாத ஒன்று செல் போன்களை உபயோகிப்பது.

மைண்ட் ரிலாக்ஸ் பண்றமாதி பாடல்கள் , காமெடி வீடியோகள் என பார்ப்போம்.இதிலும் மறுக்கமுடியாத ஒன்று செல்லப்பிராணிகள் சேட்டை வீடியோக்களை பார்ப்பது.

இது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பலருக்கும் மைண்ட் ரிலாக்ஸ் செய்ய  உதவி வருகிறது.இந்த வீடியோவில், வீட்டின் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனை  ஒன்று தினம் தினம் தனக்கு பிடித்த கார்டூன் நாடகத்தை பார்த்துவிட்டு தான் தூங்க செல்கிறது.

வீடியோ தொடங்கும் பொது, டிவி அறை வெளியே சரியான நேரத்தில் காத்துகொண்டு உள்ளது அவர்களின் பூனை.உரிமையாளரும் அந்த நேரத்திற்கு கதவை திறந்துவிட,உள்ளே ஓடிவந்து டிவிக்கு எதிரே உட்காந்து விடுகிறது.

பின்பு அந்த உரிமையாளர் தன் செல்லப்பூனைக்கு பிடித்த கார்ட்டூன் நாடகத்தை போட்டுவிடுகிறார்.வசதியாக உட்காந்த படி தனக்கு பிடித்த கார்ட்டூனை பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறது அந்த பூனை.குழந்தைகள் போல் செய்யும் இந்த பூனையின் செயல் இணையத்தில் பலரையும் ரசிக்கவைத்துள்ளது.