“அம்மா… கண்ணு எரித்து!” பூனையின் வைரல் வீடியோ

371
Advertisement

வெங்காயத்தை  வெட்டும்போது,அவற்றில் காணப்படும்  திரவ வடிவிலான சல்பெனிக் அமிலம்  காற்றுடன் கலந்து ஆவியாக மாறுகிறது. எரிச்சல் ஏற்படுத்தக் கூடிய இந்த அமிலம் காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து நம்மை அழ வைத்து விடுகிறது

பெரியவர்கள் கூட வெங்காயத்தை வெட்டும்போது குழந்தைகள் போல அழுவார்கள்.அப்போ செல்லப்பிராணிகள் மட்டும் விதிவிலக்கா ? அவைகளையும் அழச்செய்துவிடும் வெங்காயம்.

இந்நிலையில் இணையத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று  வைரலாகி வருகிறது.அதில், பெண் ஒருவர் நின்றபடி வெங்காயம் வெட்டுகிறார்.அருகில் தன் அம்மாவை ஒரு நிமிடம் கூட விட்டுவிலக மாட்டேன் என்பது  போல அவரின் செல்ல பூனை  நின்றுகொண்டு இருக்கிறது.

வெங்காயத்தை வெட்ட வெட்ட,அந்த பூனையின் கண்கள் எரிய  தொடங்கிவிட்டது. கண்களில் கண்ணீரோடு இரு கண்களை திறக்கமுடியாமல் அவதிப்படுகிறது.இந்த பூனை நெட்டிசன்களையும் கண் கலங்கவைத்துள்ளது பாவமாக உள்ளது என.