கேமராவில் பதிவான மர்ம உருவம்

282
Advertisement

விதிச்சிரமான அல்லது மர்மமான ரோமங்கள் கொண்ட உயிரினங்கள் குறித்த கதைகள் வட அமெரிக்காவின் பழங்காலத்து கதைகளின் ஒரு பகுதியாகும்.ஆனால் அங்குள்ள சில மக்கள் அவை இருப்பதை உறுதியாக நம்புகிறார்கள்.

அது போன்ற உயிரினங்கள் இருப்பதையும் அல்லது சில நேரங்களின் அது போன்ற உருவங்கள் கேமராக்களில் பதிவாகியிருந்த போதும் அவைகளை தற்போது வரை பின்தொடர முடியவில்லை.மனிதனை போலவே இருக்கும் அது போன்ற உயிரினத்தை Bigfoot என்று அழைக்கின்றனர் அந்த மக்கள்.

இந்நிலையில் அந்நாட்டு காட்டுப்பகுதில் வேட்டைக்கு சென்ற இவர்கள் காரை ஒட்டிக்கொண்டு இருக்கும்போது அவர்களின் கேமராவில், விதித்திரமான உருவம் பதிவானதை,சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

@cryptiduniversity என்ற TikTok கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில்,இரு நபர்கள் காரில் உட்காந்து பேசிக்கொண்டு காட்டுப்பாதையில் செல்கின்றனர்.படம் பிடித்தபடி இருந்த அவர்களின் கேமராவில் அருகே உள்ள மரங்களுக்கு நடுவே கருப்பு ரோமங்கள் உடன் உருவம் ஒன்று ஓடிக்கொண்டு இருப்பது பதிவாகியுள்ளது.

கேமராவில் பதிவானது Bigfoot ஆ? என பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள்,இது உண்மையானது அல்ல , நல்ல முயற்சி, அது ஒரு விவசாயி… உடை தான் ரோமங்கள் போல உள்ளது என தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.