- கனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை நேற்று கடுமையான புயல் தாக்கியது.
இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது.
அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாகாணமே இருளில் மூழ்கியது.
இந்த கடும் புயலில் சிக்கி இதுவரை 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.