ஓய்ந்தது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம்

171

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், நாளை 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, நாளை மற்றும் வரும் 5ஆம் தேதி 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள 89 தொகுதிகளிலும், நேற்று மாலையோடு பிரச்சாரம் நிறைவடைந்தது. குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்க காந்தி உள்ள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர். கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர். பிரசாரம் ஓய்ந்ததும் முதற்கட்ட தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வெளியூர் ஆட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 89 வேட்பாளர்கள் என மொத்தம் 788 பேர் களத்தில் உள்ளனர்.