ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டுபோர் நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு போர் காரணமாக சூடானில் திரும்பிய திசையெங்கும் குண்டு சத்தம் கேட்டபடி உள்ளது. இந்த நிலையில், சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த வாரம் வியாழனுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீட்பு பணிக்கு ஏதுவாக, சூடான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மே 11 ஆம் தேதி வரை 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.