மீண்டும் மீண்டும் மோடியா? தமிழகத்திலும் தாமரையா? அதிர்ச்சி கருத்து கணிப்பு

258
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்துட்டிருக்க சூழல்ல, அடுத்து எந்த கட்சி பெரும்பான்மை இடங்களை ஜெயிக்க போது? யார் பிரதமரா ஆகப் போறாரு? இப்படி பல்வேறு கருத்துக் கணிப்புகள் வலம் வந்துட்டு இருக்க நிலையில அதிகமான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்குறது பிரபல ஊடகமான India Today நடத்தி இருக்க Mood Of the Nation கருத்து கணிப்பு தான். வர்ற தேர்தல்ல தேசிய ஜனநாயக கூட்டணி 366 இடங்கள்ல வெற்றி பெறும்னும், இந்தியா கூட்டணி 104 இடங்கள்ல தான் வெற்றி பெறும்னும் இந்த கருத்து கணிப்பு சொல்லுது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக 20.4 சதவீத ஓட்டுக்களை பெற்று, ஓட்டு சதவீதத்துல இரண்டாவது இடத்தை பிடிக்கும்னும் இந்த கருத்து கணிப்புல சொல்லப்பட்டிருக்கு. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமா இருக்கறதாவும் குறிப்பிடப்பட்டிருக்கு. பிற கட்சிகள் 73 இடங்கள்ல வெற்றி பெற வாய்ப்புள்ளதா சொல்லப்படுது. அது மட்டும் இல்லாம, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 41.8 சதவீத ஓட்டுகளும், இந்தியா கூட்டணி 28.6 சதவீத ஓட்டுகளும், பிற கட்சிகள் 29.6 சதவீதம் ஓட்டுகளும் பெறும் அப்படின்னு இந்த கருத்து கணிப்புல கூறப்பட்டிருக்கு.

பாஜகவோட பிரம்மாண்டமான வெற்றிக்கு உத்திரபிரதேசம் தான் முக்கிய பங்கு வகிக்கும்னு எதிர்பாக்கப்படுது. இங்க இருக்க 80 தொகுதிகள்ல 77 தொகுதிகள் வரைக்கும் பாஜக கைப்பற்றலாம் என கணிக்கப்படுது.

தமிழ்நாட்டுல எப்போதும் இல்லாத அளவுல இந்த தேர்தல்ல பாஜக ரெண்டு இலக்க சதவீத ஓட்டுகளை பெறும் அப்படின்னு பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோரும் அண்மையில தெரிவிச்ச கருத்தும் பரபரப்பா பேசப்பட்டுச்சு.

ஆனா, தமிழ்நாட்டை   பொறுத்தவரைக்கும் இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கறதா சொல்லப்பட்டிருக்கு. 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றும் அப்படின்னும் 47 சதவீத ஓட்டுகளோட தமிழ்நாட்டுல முதலிடம் பிடிக்கும்னும் சொல்லப்படுது. அதே மாதிரி தான் Times Now கருத்துக் கணிப்புலயும் திமுக கூட்டணி தமிழ்நாட்டுல 36 தொகுதிகள்ல வெற்றி பெற வாய்ப்பு இருக்குன்னு கணிக்கப்படுது.

தமிழ்நாட்டுல திமுக 59 சதவீத வாக்குகளையும், அதிமுக 16 சதவீத வாக்குககளோட இரண்டு தொகுதிகளையும், பாஜக 20 சதவீத வாக்குகளோட ஒரு தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்பு இருக்கறதா கணிப்புகள் வெளியாகி இருக்குறது குறிப்பிடத்தக்கது. வட இந்தியா முழுசா பாஜக அலை அடிச்சாலும், தமிழ்நாடு என்னைக்கும் தனிச்சு தான் நிக்கும்னு பல நெட்டிசன்கள் சமூகவலைதளங்கள்ல கருத்து பதிவிட்டு வராங்க.

ஷைனி மிராகுலா