ரெஸ்டாரண்ட், போட்டி இடம், அலுவலகம் என பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதல் தகவல் வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண். பாஜக எம்.பியுமான இவர் மீது கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சுமத்தியிருந்தனர். அப்போது விசாரணைக் குழு ஒன்று மட்டும் அமைக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மாதம் இறுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். மைனர் வீராங்கனை உள்ளிட்டோர் புகார் அளித்த போதிலும், அவர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்காக, வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தே, போக்சோ உள்ளிட்ட பிரிவு வீரர்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, பிரிஜ் பூரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஐபிசி பிரிவு 354, 354 ஈ(பாலியல் துன்புறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது