பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடி கைது

423

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பெண்களை தவறாக பேசிய நபர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து தி.மு.க பேச்சாளர் சைதை சாதிக் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சைதை சாதிக்கை கண்டித்து சென்னையில் பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இதைதொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அண்ணாமலை உள்பட பாஜக மகளிர் அணியினரை, காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதன் பின்னர் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.