பா.ஜ.க. வாய்ப்பு கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் – பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத்

567

பா.ஜ.க. வாய்ப்பு கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மணாலியைச் சேர்ந்தவர் பிரபல இந்தி நடிகை கங்கணா ரனாவத். இவர் நடிகையாக மட்டுமல்லாமல், சர்ச்சை கருத்துகளுக்கும் பிரபலமானவர். இவரது கருத்தும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நடிகை கங்கணா ரனாவத், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தனது சொந்த மாநிலத்தின் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வாய்ப்பு கிடைத்தால், தனக்கு பெருமை என்று தெரிவித்தார். பா.ஜ.க. வாய்ப்பு கொடுத்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.