வாய்ப்பிளக்கவைக்கும் சிக்கனின் நன்மைகள்!!ஆச்சரியமான தகவல்…

125
Advertisement

பொதுவாக அசைவத்தில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது சிக்கன்,அதுமட்டுமல்லாமல் இது விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்றாக.சிக்கன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுமென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

புரதம் நம் உடம்பிற்கு எவ்வளவு அவசியமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே,அப்படி பட்ட இந்த புறத்திற்கு பெயர் போனதுதான் இந்த சிக்கன்.100 கிராம் சிக்கனில்  31 கிராம் ப்ரோடீன் அதாவது புரதம் உள்ளதால், சிக்கன்  புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.

கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்க சிக்கனில்  உள்ள B வைட்டமின்கள் உதவுகிறது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேன்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஒற்றைத் தலைவலி, இதயக் கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் சிக்கன் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எலும்பு வலுப்பெற சிக்கன் உதவியாக இருக்கும் ஏன் என்றால் சிக்கனில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்துகிறது. வைட்டமின் A கண்பார்வையை மேன்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும், மேலும் தசை செயல்பாடு மற்றும் இரத்த சோகையை போன்றவற்றை அகற்ற உதவுகின்றது.

எடையைக் குறைப்பதில் அதிக அளவு ப்ரோடீன்  கொண்ட உணவுகள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது இதில் சிக்கனும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிக்கன் தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு  குறிப்பிடத்தக்க எடை கட்டுப்பாடு காணப்பட்டதாக ஆய்வுகள் மற்றும் சோதனைகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிக்கனில் உள்ள  அதிக ப்ரோடீன் உள்ளடக்கம் மற்றும் குறைந்த கலோரிகள் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் சிக்கன் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் சிக்கனை சூடுபடுத்தாமல் குறைவான அளவு சமைத்து போதிய அளவு சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள்.