இறந்தவர்கள் நினைவு நாளில் ‘பெல்லி டான்ஸ்’ ஏற்பாடு -அதிர்ச்சி வீடியோ

142
Advertisement

குடும்பத்தில் ஒருவரை இழப்பது என்பது  கடினமான  ஒன்று.ஒரு நபர் இறந்து விட்டால் அவரின் சமுதாய முறைப்படி சில சடங்குகள் செய்வது வழக்கம்.

அதில் பொதுவான ஒன்று,இறந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் அவர்கள் இறந்த நாளில்,அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து ,வணங்கி ,நினைவு கூறுதல் கூட்டம் நடைபெறுவது. இது போன்ற கூட்டம் என்றாலே அது துக்கநாள் தான் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் இணையத்தில்  வைரலாகி வரும் வீடியோ அதிர்ச்சி அளித்துள்ளது.

அதில்,இறந்த நபர்களை நினைவு கூறுவதற்காக கூட்டம் ஒன்று எற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி குறிப்பிட்ட நாளில் மேடை அமைத்து இறந்த இருவரின் புகைப்படத்துடன் சில விவரங்களுடன்  பிளேஸ் ஒன்று  வைக்கப்பட்டு உள்ளது.இதில் என்ன அதிர்ச்சி என்றால்,இந்த துக்கநாளில் அங்கு கூடிருக்கும் உறவினர்கள் துக்கத்தை அனுசரிப்பார்கள் என நினைத்தபோது,அங்கு போடப்பட்டிருந்த மேடையில் இளம்பெண் ஒருவர் கவர்ச்சி ஆடையில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ‘பெல்லி டான்ஸ்’ ஆடிக்கொண்டு இருக்கிறார்.

Advertisement

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  கூட்டத்தில்  இருந்த புகைப்பட கலைஞர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்,இந்த வீடியோவை காணும் இணையவாசிகளும் அதிர்ச்சில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துவருகின்றனர்.