தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

249

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் குளிக்க நேற்று மதியம் முதலே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது.

ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவியிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.
கனமழையால் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்ககிறது.