நடனத்தின் நடுவில் தூங்கும்  3 வயது குழந்தை

300
Advertisement

குழந்தைகள் உலகமே தனிதான். தன்னை சுற்று உள்ளவர்களை பற்றி எந்த கவலையும் படமால் தனக்கு பிடித்ததை மட்டுமே செய்வார்கள்.

இதுபோன்று குழந்தைகள் செய்யும் ரசிக்கும்படியான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவது வழக்கம்.இந்நிலையில் , நடனத்தின் நடுவில் தூங்கும் 3 வயது குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் சோங்கிங்கில் அமைந்துள்ள குழந்தைகள் பள்ளியில் “குழந்தைகள் தினம்” நிகழ்ச்சி நடந்துள்ளது.அதில் குழந்தைகள் அழகாக பட்டாம்பூச்சி போல உடை அணிந்து நடனம்  ஒன்றை ஆடத்தொடங்கினர், அப்போது குழந்தைகள் வரிசையாக மேடையில் நின்று பட்டாம்பூச்சி போல அசைந்து  நடனம் ஆட, அதில்  ஒரு பட்டாம்பூச்சி,அதாவது ஒரு குழந்தை மட்டும் வரிசையில் பின்புறத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறது.

முதலில்,இந்த குழந்தையை பார்த்த அனைவரும், இது நடத்தின் ஒரு பகுதி என நினைத்துவிட்டனர்.சற்று நேரம் கடந்த பின் தான் அனைவரும் கவனித்தனர்,அந்த குழந்தை அசதியில் தூங்கிக்கொண்டு இருக்கிறது.

மேடையில் அழகாக பட்டாம்பூச்சி உடன் அணிந்து தூங்கிக்கொண்டு இருக்கும் இந்த குழந்தையை பார்த்து அனைவரும் ரசித்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்திலும் அனைவரை ரசிக்கவைத்து வருகிறது.