“அம்மா.. நான் இங்க இல்ல” மறைஞ்சுட்டேன்! குழந்தையின் சுட்டி தனம்

204
Advertisement

குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியை பரப்பக்கூடியவர்கள்.நாம் சோர்வாக இருந்தாலும் கூட,குழந்தைகளின் முகத்தை பார்த்தால் போதும்,சோகத்தை மறந்து நாமும் மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் விளையாட தொடங்கிடுவோம்.

குழந்தைகளும்,சற்றும் சோர்வடையாமல் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் ,அனைவரின் இதயத்தை கவர்ந்துவிடும் .

இங்கும் அப்படி தான் முகம்தெரியாத குழந்தை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் குழந்தை ஒன்று  தன் தாயுடன் விளையாடிக்கொண்டு உள்ளது.நன்றாக விளையாடிவிட்டது குழந்தை.ஒரு கட்டத்தில்,குழந்தையின் தாய் “நேரம் ஆகிவிட்டது,இது தூங்குவதற்கான நேரம் ” என்று கூறிக்கொண்டே குழந்தையை நோக்கி வருகிறார்.

அருகே வந்து குழந்தையை பார்த்துவிட்டு அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.காரணம் அந்த குழந்தை தன் தலையில் சால்வை ஒன்றை போட்டு.அம்மாவால் தன்னை கண்டுபிடிக்க முடியாது, நான் தான் மறைந்துவிட்டேனே என்பது போல தரையில் அமர்ந்தபடி நகர்ந்து நகர்ந்து செல்கிறது.

குழநதையின் இந்த சுட்டுத்தனமான செயல் இணையத்தில் அனைவரையும் தொடர்ந்து ரசிக்கவைத்து வருகிறது.அத்துடன் , பலரும் தங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் செய்யும் இதுபோன்று சுட்டி தனத்தை பகிர்ந்து வருகின்றனர்.