குழந்தையை அழவிட்டு ரசிக்கும் குடும்பம்

328
Advertisement

நிமிடத்தில் முகபாவனையை மாற்றக்கூடிய திறமை குழந்தைகளுடன் பிறந்தது.இதை அனைவருமே நம் வீட்டு  சுட்டிகளிடம்  கண்டு ரசித்திருப்போம்.அது போன்ற ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் , குழந்தை ஒன்று மயங்கரமா அழுதுகொண்டு உள்ளது.பார்ப்பதற்கே பாவமாக உள்ளது.சில நிமிடங்கள் அந்த  குழந்தையை அழவிட்டு பார்த்தபிறகு,பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்கிறார் குழந்தையின் பெற்றோர்.சட்டெனெ நிமிடத்தில் தன் முக பாவனையை மாற்றி குதூகலத்தில் நடனம் ஆடுகிறான் இந்த குழந்தை.

குழந்தையை வம்பு பண்றக்கே எல்லாரு வீட்லயும் ஒரு கூட்டம் இருக்கும் இது போல.சில வினாடிகள் அந்த குழந்தை மகிழ்ச்சில் ஆட.பாடலை நிறுத்திவிடுகிறார்கள்,ஒடனே தன் முகத்தை மாற்றி மீண்டும் அழத்தொடங்கினான் அந்த குழந்தை.மீண்டும் பாடல் போட , மீண்டும் மகிழ்ச்சியில் நடனம்.பாடல் நிற்க மீண்டும் அழுகை என இந்த வீடியோவை பார்ப்பவர்கள் குழந்தையின் முகபாவனையை ரசித்துவருகின்றனர்.