இணையத்தை கலக்கும்  5 மாதக்குழந்தை

313
Advertisement

குழந்தைகள் எதையும் வேகமாக கற்றுக்கொள்வார்கள்  குறிப்பாக பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு நகர்வையும் மாறாமல் செய்துகாட்டும் திறன்  உண்டு குழந்தைகளுக்கு.

இதன்மூலம் நல்வழியில் அந்த குழந்தை வளர முழு பொறுப்பு பெற்றோர்களிடம் மட்டுமே உள்ளது.சில நேரங்களில் குழந்தைகள் செய்யும் பிரமிக்கவைக்கக்கூடிய  செயல்கள் நம்மை வியப்படையச்செய்யும்.

இந்த வரிசையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அதில் , குழந்தையின் தாய் உடற்பயற்சி செய்கிறார்.அருகில் இருக்கும் அவரின் 5 மாத குழந்தை,தன் அம்மா செய்வதுபோலவே தானும் செய்கிறது.முழு பலத்தை உபயோகித்து கைகள் மற்றும் கால்களை நீட்டு மேம்பாலம் போல நிற்கிறது அந்த குழந்தை.

பகிரப்பட்ட இந்த வீடியோவுடன், ”எனது 5 மாத குழந்தை புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறது மற்றும்  அம்மாவைப் போல வலிமையான நான், உண்மையில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறுவது போல் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

பார்ப்பவர்களை வியப்படையச்செய்யும் இந்த  குழந்தை வரும்காலத்தில் பல சாதனைகளை செய்ய தங்கள் வாழ்த்துக்கள் என இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.