ஆருத்ரா மோசடி வழக்கு ! காவல் அதிகாரி சிறப்பு பேட்டி !

27
Advertisement

பா.ஜ.,வில் பதவி பெற, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக, பொதுமக்களிடம், 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து சிக்கிய ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹரீஷ், விசாரணைக்கு ஆஜராகும்படி, அக்கட்சி நிர்வாகிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழக பாஜக விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்தவர் ஹரிஷ். ஆருத்ரா தங்க நிதியின் இயக்குனராக இருந்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வந்த இந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 30 சதவீதம் வரை மாத வட்டி தருவதாக பொதுமக்களிடம் விளம்பரம் செய்தது.

தமிழக பாஜக விளையாட்டு பிரிவு செயலாளராக இருந்த அதன் நிறுவனர் ஹரீஷ் அளித்த வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் இதில் முதலீடு செய்துள்ளனர். ஆருத்ரா நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஆருத்ரா நிறுவனம் தங்களிடம் பெற்ற பணத்தை உரிய நேரத்தில் திருப்பித் தரவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

போலீசார் நடவடிக்கை: இதைத்தொடர்ந்து ஆருத்ரா நிறுவனத்தின் 14 இயக்குனர்கள் மற்றும் ஆருத்ரா பெயரில் இயங்கி வரும் 5 நிறுவனங்கள் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக விளையாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த ஹரீஷைக் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.