அரபிக்குத்து பாடலுக்கு மன்சூர் அலிகானின் டான்ஸ் இணையத்தில் வைரலானது

311
Advertisement

நடிகர் விஜய்யின் ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார் . படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் காமெடியனாக யோகிபாபுவும் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலாக ‘அரபிக் குத்து’ பாடல் வெளியானது. ஹலமதி ஹபீபோ என்ற அந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

இந்தப் பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதால் படத்துக்கு நல்ல ப்ரோமோஷன் கிடைக்கிறது . இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கடற்கரையில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.