Apple அறிமுகப்படுத்தும் Lockdown Mode

267
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad மற்றும் mac சாதனங்களுக்கு அடுத்த கட்ட செக்யூரிட்டி அப்டேட்டாக அறிமுகம் ஆக உள்ளது lockdown mode.

NSO நிறுவனம் சில நாடுகளுக்கே விற்றுள்ள பெகாசஸ் போன்ற சக்தி வாய்ந்த உளவு பார்க்கும் மென்பொருளின் மூலம் நடக்கும் hacking, cyber attackகளில் இருந்து அரசியல் தலைவர்கள், சமூக போராளிகள், உச்ச நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றவர்களை பாதுகாக்கவே இந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அடுத்ததாக வரவுள்ள iOS 16, iPadOS 16 மற்றும் macOS Venturaவில் lockdown mode செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lockdown modeஐ enable செய்த பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக, போனின் இயல்பான இயக்கத்தில் பல கட்டுப்பாடுகளை பயனர்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என  ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், Lockdown modeஇன் பாதுகாப்பை மீறி hack செய்து காட்டுபவர்களுக்கு 2 மில்லியன் வரை பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.