இனி டயர்ல காத்து இருந்தா என்ன, இல்லனா என்ன?

223
Advertisement

19ஆம் நூற்றாண்டில் அறிமுகமான காற்று நிரப்பப்பட்ட டயர்கள், வாகன போக்குவரத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்லும் நபர்கள், டயர்களில் காற்று இறங்கி போவதால் பாதிக்கப்படுவது சகஜமான நிகழ்வாக உள்ளது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய முயற்சிகள் தொழில்நுட்ப உலகில் நடந்து கொண்டே தான் உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Goodyear நிறுவனம் தயாரித்துள்ள, காற்றில்லா டயர்களை கொண்டு டெஸ்லா 3 மாடல் கார் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.

பிரத்யேகமான பிளாஸ்டிக் ஸ்போக்ஸ் மற்றும் ரப்பர் support உடன் இந்த வகை டயர்கள் தயார் செய்யப்படுகின்றன.

தானியங்கி கார்களுக்கும், மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கும் இப்போதய டயர்களுக்கான தேவை மாறுபட்டு உள்ளது.

குறைவான பராமரிப்பு, puncture proof, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளாக டயர்கள் இருப்பதுடன் சென்சார் போன்ற நவீன அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதே தற்கால வாகன ஓட்டியின் தேவையாக உள்ளது.

இதனை புரிந்து களம் இறங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களும் வழக்கமான டயர்களுக்கு விரைவில் மாற்று டயர்களை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.