ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் அலியா பட் – நெட்ப்ளிக்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு

351
Advertisement

பாலிவுட் நடிகை அலியா பட் OTT தளமான நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அலியா நடித்த ‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படம் ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்தது மிக பெரிய சாதனையாக கருதப்படுகிறது.அதோடு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் .

நெட்ப்ளிக்ஸ் இப்போது அலியா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற தகவலையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது . புகழ்பெற்ற ‘Wonder Woman’ படத்தின் நாயகியான கல் கடோட் ,மற்றும் ’50 Shades’ புகழ் ஜேமி டோர்னன் ஆகியோருடன் அலியா பட் இணைந்து நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது .
அலியாவின் இத்தகைய வளர்ச்சிக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.