விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஜெர்மனியில் ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜெர்மனியின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான Lufthansa, உள்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் அதிகப்படியான விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவின் 2வது பெரிய விமான நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் Lufthansa விமான நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், Lufthansa நிறுவனம் ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.