ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு மனிதநேயத்துடன் ஏராளமான நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.
20 கோடி கிலோ கோதுமை, 13 ஆயிரம் கிலோ மருந்துகள், 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றை ஆப்கனுக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஆப்கன் மக்களுக்கு வழங்கியுள்ள நிவாரண உதவிகள் குறித்து பார்வையிடுவதற்காக, இந்தியக் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது.
வெளியுறவு துறை இணை செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழு ஆப்கன் சென்றது.
ஆப்கனில் தாலிபான் அரசு பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்டிற்கு இந்தியக் குழு செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.