இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு

43

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் என்பவர் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்டும் என கடந்த 28ஆம் தேதி என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

Advertisement

இந்நிலையில், அந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.