ஹாட்ரிக் 2022 – நடிகர் விக்ரமின் 3 படங்கள் வெளிவரும் ஆண்டு

341
Advertisement

இந்த ஒரு வருடத்தில் மட்டும் நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன் ஆகிய 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துள்ளன. கோப்ரா படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முழுமூச்சாக வேலைசெய்துவருகின்றனர் .

நீண்ட காலமாக முடங்கி இருந்த துருவ நட்சத்திரம் படமும் ஓரிரு மாதங்களில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. விக்ரம் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் அவரது ரசிகர்கள் ஏக உற்சாகத்தில் காத்திருக்கின்றனர் .