விஜய்க்கு வில்லனாக விவேக் ஓபராய் ஒப்பந்தம்

410
Advertisement

பீஸ்ட் படத்துக்கு அடுத்ததாக நடிகர் விஜய் படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க போவதாக பிரகாஷ்ராஜ், நானி பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு வில்லனாக நடிக்க இந்தி நடிகர் விவேக் ஓபராயிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவேக் ஓபராய் ஏற்கனவே விவேகம் படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.