வெற்றிமாறனுக்கு உதவி  இயக்குனரான  நடிகர் கருணாஸ்

311
Advertisement

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் ரசிகர்கள்  மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார்.இதில் வாடிவாசல் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது என்றே கூறலாம்.

வெற்றி மாறன் இயக்கும் படங்கள் மிகவும் அருமையாக இருக்கும் என்பதாலும் அவர் சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.இந்த படத்தில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் சென்னையில் 400- க்கும் மேற்பட்ட காளைகளை வைத்து சூர்யாவின் சோதனை படப்பிடிப்பை நடைபெறவுள்ளது. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் உதவி இயக்குனராக நடிகர் கருணாஸ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்தில் உதவி இயக்குனராக இணைந்துள்ள கருணாஸ் ” ராமனுக்கு அணிலாக இருப்பது போல்..இந்த வெற்றி கூட்டணியில் வெற்றிமாறனுக்கு அணிலாக இருக்க விரும்பினேன்” என தெரிவித்துள்ளார்.