30 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை அருணா

669
Advertisement

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அருணா. கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்து இருக்கிறார். திருமணதுக்கு பின்பு படங்களில் நடிப்பதை குறைத்து ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகினார். சமீப காலமாக அருணா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

தற்போது 30 வருடங்களுக்கு பிறகு அருணா மீண்டும் சினிமாவில் நடிக்க போகிறார் .மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் நயன்தாரா, சத்யதேவ் ஆகியோரும் நடிக்கின்றனர். தமிழ் படங்களில் நடிக்கவும் இவருக்கு அழைப்புகள் வருகிறதாம் .