3 ஆண்டாகப் பச்சைக்கறியை சாப்பிடும் வாலிபர்

351
Advertisement

தொடர்ந்து மூன்றாண்டாக பச்சைக்கறியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வரும் இளைஞர் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா பகுதியைச் சேர்ந்தவர் வெஸ்டன் ரோவ். 39 வயதாகும் இவர் தனது உணவாக சமைக்கப்படாத இறைச்சியை அப்படியே கடித்து சாப்பிட்டு வருகிறார்.

இதுபற்றிக் கூறியுள்ள ரோவ், ”என்னுடைய 20 ஆவது வயதில் அரிப்பு, தோல் அழற்சி, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டபோது ஃபிட்னஸ் குறித்து அக்கறைகொள்ளத் தொடங்கினேன். அப்போது பல்வேறு வித்தியாசமான உணர்வுகளும் எனக்குள் ஏற்படத் தொடங்கின. அதனால் என் உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை என்பதை உணரத் தொடங்கினேன். எனினும், 35 வயதானபோதுதான் இறைச்சியைப் பச்சையாக சாப்பிடத் தொடங்கினேன்.

மதிய உணவுதான் என் பிரதான உணவு. அரைப் பவுண்டு பச்சை இறைச்சியை மூன்று அல்லது நான்கு முட்டை சேர்த்து எண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவேன். காலை உணவாக பழங்களும், இரவு உணவாக வேகவைத்த உருளைக்கிழங்குடன் பச்சை மாமிசமும் சாப்பிடுவேன்.

நான் சாப்பிடும் அனைத்து இறைச்சிகளையும் உள்ளூரில் நண்பர்களிடமிருந்து பெறுகிறேன். என் தோட்டத்தில் மரம், செடிகொடிகளை நட்டு எனக்குத் தேவையான பழங்களைப் பெற்றுக்கொள்கிறேன்” என்கிறார்.

பச்சை மாமிசத்தை உண்டுவருவதால் தனது ஆற்றல் அதிகரித்து வருவதாகவும், இந்த உணவுப் பழக்கத்தால் இதுவரை எந்தப் பிரச்சினையும் தன் உடலில் எழவில்லை என்றும் கூறுகிறார் ரோவ்.

”இனிமேல் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடப்போவதில்லை” என்றும், ”சமைத்த உணவுகளை சாப்பிடாததால் வருத்தம் இல்லை” என்றும் சொல்கிறார்.

வித்தியாசமான மனிதர்…