வீட்டில் மேல் விழுந்த மரம்; அகற்ற முடியாமல் தவித்த தீயணைப்பு துறை

65

கொடைக்கானல் அருகே தொடர்ந்து பெய்த மழையால், வீட்டின் மீது ராட்சத மரம் சாயந்ததில் நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஏரி சாலை அருகே உள்ள வீட்டின் மீது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ராட்சத மரம் சாய்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டினுள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடிய தீயணைப்பு துறையினர் வீட்டின் மேல் விழுந்த ராட்சத மரத்தை அகற்றினர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மரங்கள் விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.