கர்நாடக சட்டசபை தேர்தலில் முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…

14
Advertisement

கர்நாடக சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்க ஒரு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சோதனை முறையில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது என்றும் வாக்காளர்கள், சுனாவனா செயலியை பதிவிறக்கம் செய்து, வாக்காளர் அடையாள அட்டை எண், செல்போன் எண் மற்றும் செல்பி புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதனையடுத்து ஸ்கேனர் கருவி மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.